திதி:31/05/2026
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி கண்னையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமே
பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
அன்பு கொண்ட உள்ளம் தான் மாறிடுமோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே!
ஆயிரம் உறவுகள் இங்கிருந்தாலும்
அம்மா என்ற உறவு இனி வருமோ?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகின்றோம்..!
ஆழ்ந்த இரங்கல் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் .??? தர்சினி கரன்