1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மனோன்மணி கண்னையா
வயது 71

அமரர் மனோன்மணி கண்னையா
1952 -
2023
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 23-04-2024
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி கண்னையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
ஓரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அம்மா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கல் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் .??? தர்சினி கரன்