Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1940
இறப்பு 11 APR 2023
அமரர் மனோன்மணி தேவசகாயம் 1940 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி தேவசகாயம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
என்னுடன் பிறந்தவளே
என்னருமை அக்கா!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததம்மா...

அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரியே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
 உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே...

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு சகோதரியாய் பிறந்திடவே
 நாம் ஏங்குகிறோம்!!

உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம்..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
 என்ன பாவம் செய்தோம் உடன்பிறப்பே...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: காசிப்பிள்ளை கதிர்காமநாதன்(தம்பி - சுவிஸ்)

Photos

Notices