Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 MAY 1952
மறைவு 25 OCT 2022
அமரர் மனோகரன் செல்லத்துரை (சின்னக்கிளி)
பழைய மாணவர்- வேலணை/ மத்திய மகாவித்தியாலயம்
வயது 70
அமரர் மனோகரன் செல்லத்துரை 1952 - 2022 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ், ஜேர்மனி Arnsberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோகரன் செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:14/10/12023

அப்பா! எண்ணில் அடங்காத நற்குணங்கள்
அத்தனைக்கும் நாயகனான
உங்களை நாங்கள் இழந்து ஓராண்டு ஆனதப்பா…
அழுதழுது வெதும்புகின்றோம்
அனுதினமும் நாங்கள்

ஓராயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்திட்டாலும்
எம்முடன் நீங்கள் இல்லாத துன்பம் தீராதப்பா..
காலனவன் ஆசைகொண்டானோ
உங்கள் பாசம் தன்னில்
காத்து சென்றானோ உங்கள் உயிரினையே!

நீங்கள் இங்கு இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது ஆனால் இன்னமும்
எம் கனவில் வாழ்ந்து
அழகாக்குகின்றீர்கள் எம் மீதி நாட்களை..

எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு என்றபடி
ஆனந்தமாய் அன்பு நிறைவுடன் வாழ்ந்த நீங்கள்
எங்கு சென்றுவிட்டீர்கள்? ஏன் இந்த தொலைதூரம்??

இன்னும் உங்களுடன் வாழ்ந்த காலங்கள்
எங்களை வழிநடத்திவைக்கும்
என்ற நம்பிக்கையில்
எங்களின் பயணம் தொடர்கிறது
உங்கள் பிரிவின் சுமையை சுமந்தபடி

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...   

தகவல்: திருமேனிப்பிள்ளை குடும்பத்தினர்