1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மனோகரன் கனகரத்னம்
(மனோ)
வயது 63
Tribute
44
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், இந்தியா மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோகரன் கனகரத்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக் கிடக்கின்றோம்
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்
அப்பா அப்பா என்று எங்கள் நா
அழைக்கிறது ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எமது குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம் !