யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் குருநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே மனோ...
என் செய்வோம் நாங்கள்?
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உங்கள் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமக்கு உதவி செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை மற்றும் வீட்டுக்கிரியை 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று Canada, Toronto வில் நடைபெறும்.
Uncle, you have inspired many with your simplicity and hard work. You were a great father, a husband and a role model for many. I will forever cherish the moments spent with you and remember your...