திதி: 24-03-2023
முல்லைத்தீவு கணுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராசபிள்ளை வசீகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததுவோ
தங்கள் நினைவுகள் மட்டும் நிறைகிறதே
வேண்டுதல் இன்னும் குறையவில்லையே
உங்கள் ஆசைமடி வேண்டி நிற்கின்றோம்
விழிகள் மீண்டும் ஒருமுறை காணுமோ
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
சேராத செல்வமெல்லாம் மனைவி
பிள்ளைகளுக்காய் சேர்த்துவிட்டு
சொந்தங்களோடு சேர்ந்த்திருக்க மறந்து
நீங்கள் சென்றதேனோ
பாரினிலே நண்பர்கள் பலவிருக்கு
எம் செல்வமே பக்கத்துணை
நீங்கள் இன்றி பயனேது எமக்கு...!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்...!
We pray for vasi’s rest In Peace and we send our sympathy with worries to his family..,, (from:- krishna, kani &krishan)