

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் தனபாலசிங்கம் அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(நவமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பாபு, சுகந்தன், சுகந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆரணி, தீபா, விஜயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரராஜசிங்கம், துரைராஜசிங்கம், குணலிங்கம், நாகேஸ்வரி, தங்கராணி, காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், இரத்தினசிங்கம், பரமாணந்தன், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சங்கீதன், மதுஷ், தரன், யுவன், இராவணன், பிரீத்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.