1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மாணிக்கம் சுப்பிரமணியம்
(பிள்ளையார்)
வயது 80
அமரர் மாணிக்கம் சுப்பிரமணியம்
1940 -
2020
புளியங்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! ஆண்டொன்று ஓடியதோ? இதயம் ஆறவில்லை...
ஈரவிழிகளும் காயவில்லை!
மெழுகாய் உருகி அன்பாய் அரவணைத்து வழிநடத்திய ஒளியே !
கண்ணுக்குள் மணியாக எம்மை வைத்து - இமையாக காத்து நின்ற தெய்வமே!
எண்ணியதை எமக்களித்து ஏணியாய் ஏற்றி வைத்த- எம் ஐயனே! மாணிக்க மைந்தனே!
ஓரிடத்தில் நிற்காமல் ஓடிய பாதங்கள் - ஓய்ந்துபோய் ஓராண்டாகியதோ?
எம்முள் உயிராய் என்றென்றும் வாழும் எம் உன்னதமான தந்தையின் ஆத்ம சாந்தியை வேண்டி புளியங்கூடல் அம்பாளின் பாதக்கமலங்களை பணிந்து நிற்கிறோம்.
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்:
குடும்பத்தினர்
எமது அப்பாவின் இழப்பு செய்தி கேட்டு எம்முடன் இரங்கல் செய்திகளை பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.