
-
14 FEB 1950 - 29 NOV 2022 (72 வயது)
-
பிறந்த இடம் : மானிப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : உருத்திரபுரம், Sri Lanka கிளிநொச்சி, Sri Lanka சுவிஸ், Switzerland
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் நடராசா(ஜெபநேசன்) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
“நல்ல போராட்டத்தைப் போராடினேன்,
ஓட்டத்தை முடித்தேன்,
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது”
-(2 தீமோத்தேயு 4:7)
ஆண்டு இரண்டு அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
அன்பான குடும்பத்தின் அப்பாவே!
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் மாறாத நினைவுகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குகின்றோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்,
எமக்காக பட்ட பிரயாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!
உங்கள் ஆவிஆத்மா ஆண்டவர் ஆகிய
இயேசு கிறிஸ்துவோடு இளைப்பாறுவதை
இட்டு எங்களை தேற்றிக்கொள்கிறோம்...
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மானிப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

Rest in Peace