Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 FEB 1950
இறப்பு 29 NOV 2022
அமரர் மாணிக்கம் நடராசா 1950 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் நடராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

 “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல்
 பாக்கியவான்கள் அவர்கள் தங்கள் பிரியாசங்களை
விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்”
-(வெளி 14:13)

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு
முகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!

ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய் ஆறாத்துயருடன்,
அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!

உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்
எமக்காகத் தந்து எங்கள் உயர்வே உங்கள்
ஒரே இலட்சியமாய் கொண்டு வாழ்ந்தீர்கள்
அப்பா!

உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர் விடும் ஒளியாய் மலர்கின்றன
ஆண்டொன்று ஆனாலும் அழியாத அன்புருவாக- என்றும்!
வாழ்வீர்கள் எங்கள் நெஞ்சங்களில்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 06 Dec, 2022