

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் சத்தீயசீலன் அவர்கள் 12-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர்(வேலணை) அன்னலட்சுமி(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்மநாதன்(தம்பு) நடராசதேவி(மாசிலா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
மேனகன்(பிரியங்கா நகை மாளிகை), ததுசன்(வயம்ப பல்கலைக்கழகம்), ரோசனா(றுகுணு பல்கலைக்கழகம்), கயானா(வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), கோபியன்(வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியா, ரூபி, அகிலசீலன்(அகிலன் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலகிருஸ்ணன், கமலநாதன்(அவுஸ்திரேலியா), மதிவதனா(பிரான்ஸ்), ஜெயந்தி(ஆசிரியை- வவுனியா), ஜெயந்தன்(பிரான்ஸ்), சுமதி(பிரான்ஸ்), ரமணி(கனடா), ரதினி(சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகநாதன், சிவமலர்(பிரான்ஸ்), இன்பராஜன்(பிரான்ஸ்), முரளிதரன்(கனடா), சேரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுபாங்கினி அவர்களின் அன்புச் சிறியத் தந்தையும்,
அஞ்சனா(பிரான்ஸ்), நிருஜனா(பிரான்ஸ்), மரிஷன்(பிரான்ஸ்), சாருகன்(பிரான்ஸ்), கேசகி(கனடா), மிதுலன்(கனடா), மகிரா, துசானீ ஆகியோரின் பாசமிகு பெரியத் தந்தையும்,
அசோக், சங்கித்தன், ரக்சிகா, சாருகான், கிஷானி(பிரான்ஸ்), கேசனா(பிரான்ஸ்), காணியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.