Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAR 1939
இறப்பு 02 AUG 2022
அமரர் மாணிக்கம் துரைசிங்கம்
பிரபல வர்த்தகர்- கணேஸ் கபே, கண்டி & கொழும்பு
வயது 83
அமரர் மாணிக்கம் துரைசிங்கம் 1939 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel/Bienne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் துரைசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 29-07-2025

அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே

நீங்கள் பிரிந்து
மூன்று வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள்
பல செய்து வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே
மூன்று ஆண்டுகள் கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 02 Aug, 2022
நன்றி நவிலல் Wed, 31 Aug, 2022