Clicky

தோற்றம் 09 MAY 1961
மறைவு 08 NOV 2024
திரு மாணிக்கம் ரவீந்திரன் (ரவி)
நாதஸ்வர வித்வான்
வயது 63
திரு மாணிக்கம் ரவீந்திரன் 1961 - 2024 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Manickam Raveendran
1961 - 2024

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம். மலர்ந்த முகமோ மறைந்தது மண்ணில் முத்தும் புதைந்தது ! நெருங்கிய நண்பரோ மறைந்தார் நெஞ்சில் நிலையாய் உறைந்தார் ! ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே எமை பாரோடு தவிக்க விட்டு பாதியிலே போனதேனோ வானத்து நிலவாய் வலம் வந்து அரும்பணியாற்றிய அற்புதமே இப்பிறவியில் அல்ல எப்பிறவியிலும் யாம் காணோம் நாதஸ்வர ஓசை தருவதில் நல்லவர் * தரணியே மகிந்திடும் இந்த ஓசை கேட்டு எளியோர்க்கு கர்ணனாய் இருந்தார் குடும்பத்தில் ஒருவராய் வாழ்ந்தார் ! தேடுகின்றோம் உன்னைக் காணாமல் வாடுகின்றோம் உந்தன் நினைவாலே ! மீண்டும் வந்திங்கு எமை காத்திடுவாய் வேண்டிடும் எங்களுக்கு அருள்புரிவாய் ! புன்னகை பூத்திடும் உன்முகம் மீது பூமாலைகள் பலநூறு விழுந்தனவே ! வரிசையில் வந்தனர் உனைப்பார்க்க காத்து நின்றனர் உன்குரல் கேட்டிடவே ! நித்தம்நாம் உரையாடி மகிழ்ந்தோமே நினைத்துப் பார்க்கிறேன் கண்ணீருடன் ! நடந்திடுமா மீண்டும்இனி என்வாழ்வில் கடந்திடுமா என்காலமும் இனி நீங்கள் இல்லாமல் ! என்றும் உன்நினைவே எங்களுக்கு எதிலும் உன்முகமே என் விழிகளுக்கு ! துடுப்பின்றி கடலில் தவிக்கின்றோம் விடுப்பிலே சென்றாயோ விண்ணிற்கு ! மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.* இதய அஞ்சலி ஈரவிழிகளுடன் உங்கள் அன்பு நண்பன் நாதன் ரெமிலா குடும்பம் பிரான்ஸ் *

Write Tribute