Clicky

தோற்றம் 09 MAY 1961
மறைவு 08 NOV 2024
திரு மாணிக்கம் ரவீந்திரன்
நாதஸ்வர வித்வான்
வயது 63
திரு மாணிக்கம் ரவீந்திரன் 1961 - 2024 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறுதி வணக்க அஞ்சலி! ___________________ அமரர் நாதஸ்வர வித்துவான் ரவீந்திரன் மாணிக்கம் என்பவருக்கான இறுதி வணக்க அஞ்சலி! பேரன்பு கொண்ட மதிப்புக்குரிய எனது அருமை நண்பரும்! நாதஸ்வர வித்துவானுமான ரவீந்திரன் மாணிக்கம் என்பவரை! பல்லாண்டுகளாக நான் அறிவேன்! ஈழ தேசமாம் நாச்சிமார் கோவில டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரானாலும்! புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில்! 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த இவர்! என்னோடு நன்கு நெருங்கிப் பழகிய உற்ற நண்பனும் ஆவார்! பல்லாயிரம் பேரின் பாராட்டைப் பெற்ற! நாதஸ்வர கலை ஞான சக்கரவர்த்தியாவார்! பற்பல பட்டங்கள் தங்கப்பதக்கங்கள் பல விருதுகள் பெற்று அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற தோடு! எண்ணற்ற திருமணங்கள் பூப் புனித நீராட்டு விழாக்கள் மற்றும் மங்கள நிகழ்வுகள்! ஆலய திருவிழாக்களில் அன்னாரின் நாதஸ்வர கானமே இன்னிசையாக அனைவர் காதுகளிலும் ஒலிக்கும்! அந்த அற்புதமான நாதஸ்வர இசை சக்கரவர்த்தி! காத்திகைத் திங்கள் எட்டாம் நாள் 2024 ஆம் ஆண்டு அன்று! எமையெல்லாம் கலங்க வைத்து! இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தி அறிந்து! தாங்க முடியாத மனவேதனை அடைகின்றேன்! அன்பு மனைவி சண்முகப்பிரியாவுடன் இல்லற வாழ்வில் இணைந்த இவருக்கு! முத்தான மூன்று பிள்ளைகளும் இருக்கின்றார்! மூத்த மகன் ஆகாஷ் அன்பு மகள் அப்சரா இளைய மகன் அதர்ஸ் ஆகிரோடு ஆனந்த வாழ்வு வாழ்ந்து வந்த இவர்! இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுகயீன முற்றிருந்து! மீழாத் துயில் கொண்ட இசை வித்தகரே! மங்கல இசையில் மதிநுட்பம் நிறைந்தவரே! ஆலயப் பணியிலும் ஆர்வம் கொண்ட வரே! அன்பு மனைவி அன்பான பிள்ளைகள் உற்றார் உறவுகள் நண்பர்கள் அனைவரையும் தவிக்க விட்டு! மீண்டு வர முடியாத தூரம் சென்றது ஏன் ஐயா! அனைவரிடத்திலும் அன்பு பண்பு பாசத்தோடு பழகுகின்ற நற்பண்புகள் நிறைந்தவரே! எல்லோரையும் அரவணைத்து வழி நடக்கும்! அற்புதமானவரே நல் மனிதநேய மாண்பு எது எப்படியோ மரண தேவன் பிடியில் சிக்கி மீளாத் துயில் கொண்ட உந்தனுக்கு! என் குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கி! விடை பகருகின்றேன் அருமை நண்பனே சென்றுவா! உன் உயிர் உடல் எமை விட்டு மறைந்தாலும்! உன் உருவம் என் விழித்திரையில் என்றும் நிலைத்திருக்கும்! உன் நாமமோ என்றும் என் நாவில் குடியிருக்கும்! உந்தன் ஆத்மா சாந்தி பெற இறை பாதம் பணிகின்றேன்! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute