1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
83
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் இரட்ணவடிவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து
ஒரு வருடம் ஒடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
ஒருபோதும் உம் கொள்கை நம்வாழ்வில்
என்றும் மறையாது அப்பா!
உங்கள் நினைவுகள்- எம் மனதை
விட்டு நீங்காது அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்