

யாழ். ஏழாலை தெற்கு விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கொழும்பு, பிரித்தானியா Southend-on-Sea ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி முத்துச்சுவாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் அரசியாய் வலம்வந்த
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஓராண்டு ஆனாலும் தவிக்கின்ற எங்களை விட்டு
உங்கள் பாசமிகு சகோதரன் சென்றுவிட்டார்
என்ற ஆதங்கத்தில் அவர் சென்ற அதே மாதத்தில்
அவருடன் சென்றது ஏன் அம்மா
எங்கள் பாசமிகு மாமாவே, அம்மாவிற்கு
துணையாக முத்தான எங்கள் அப்பா
முத்துச் சுவாமியை தேர்ந்து வாழவைத்துடன்
நின்றுவிடாது இன்பத்திலும் துன்பத்திலும்
துனைநின்று எங்களை அன்பாலும் பண்பாலும்
ஆளாக்கிய நீங்கள் அம்மாவை உங்களுடன்
அழைத்துச் சென்றது ஏன்மாமா?
வையத்துள் வாழவாங்கு வாழ்ந்து
உற்றரும் உறவினரும் ஊராரும்
போற்றும் மங்கையாகவும், மங்கை
அக்காவாகவும்,
மங்கை அன்ரியாகவும்
பாசம் கொண்டு
வாழ்ந்த எங்கள் தெய்வமே
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும்
பாசத்துடனும் அரவணைத்து
வழிநடத்திய
அந்த நாட்களை
எண்ணி மனமுருகி நிற்கின்றோம்
எல்லோருடனும் ஒற்றுமையாய்
உண்மையாய்,
எளிமையாய் பாசத்துடன்
வாழக் கற்றுத்தந்த
நீங்கள் என்றும்
எங்கள் வாழ்வின்
ஒளிவிளக்காய்
வலம் வரும் குலவிளக்கு
உங்கள் இருவரினதும் ஆத்மாவும் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லையென்று யார் சொன்னது?
நாவிரெண்டு வயதினிலே
மூவருக்குத் தாயாக
தாயிழந்த சோதரரை
தூயவளே தத்தெடுத்தாய்…
அண்ணனான பாலுத் தாத்தா
அனைவருக்காய் பாடுபட
தன்னையறியா பருவமதில்
தமையனுக்கும் தாயானாய்..
வெண்ணீரில் குளிப்பாடி
விரும்பிய உணவருந்தி
கண்ணீரைக் காணா வயது
கடந்து நீ வந்ததில்லை…
தும்பி பிடித்து விட்டு
துடுக்காய் நடை பயின்று
வெம்பிய காய் கடித்து
விரும்பியதும் அணிந்ததில்லை…
பசித்து அழும் வயதினிலே
பரிமாறப் பழகிக் கொண்டாய்
அடம்பிடிக்கும் வயதினிலே
அடுப்படியை அண்டி நின்றாய்…
வீட்டுக்காய் நோன்புகளும்
நாட்டுக்காய் மாண்புகளும்
கூட்டம்,போராட்டமுமாய்
முட்டு மறந்து சிட்டாயலைந்தாய்…
முத்துசுவாமிதனை
அத்தநாதீசனாக்கி
மொத்தமாய் ஈன்ரெடுத்த
ரத்தினங்கள் ஐந்து கண்டாய்…
வித்தகியே..
உன் விழுதுகள் நாம்- இன்று
விம்மி விம்மி விசும்புவது அறியாயோ..
மொத்தமுமாய்..
உன்னை தத்தெடுத்த-உன்
தமையனிடம் தான் சென்று சேர்ந்தாயோ..
பத்தொடு பதினொன்று அல்லவே அல்ல
அப்பாவின் தாயே மடி தாறாயோ மெல்ல
எப்போதும்போல எம் தலை கோதுவாயா
அன்றி..
இப்போதுபோல எமை ஏங்கவைப்பாயா..?
-உனதன்பு- பேரக்குழந்தைகள்.