

யாழ். ஏழாலை தெற்கு விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கொழும்பு, பிரித்தானியா Southend-on-Sea ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி முத்துச்சுவாமி அவர்கள் 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சுந்தரம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், முத்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துச்சுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், செல்வராணி, காலஞ்சென்றவர்களான பராசக்தி, பரராசசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நாகராஜா, காலஞ்சென்றவர்களான தம்பி, கந்தசாமி, இராசம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜனி, சிறிரஞ்சிற், காலஞ்சென்ற ஜெயரஞ்சிற், உதயரஞ்சிற், காலஞ்சென்ற தேவரஞ்சிற் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இக்பால், இந்திராதேவி, பரமசௌந்தரி, தர்ஷினி, மனோகரி(றேணுகா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சியாமினி, ஹரிகரன், உஷாமினி, தியாபரன், கிருபாகரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சரஸ்வதி, சின்னத்துரை, சுந்தரலிங்கம், மகேஸ்வரி, யோகம்மா, சபாரத்தினம், இந்துராணி, ராஜரட்னம், காலஞ்சென்றவர்களான செல்வநாயம், அன்னலிங்கம், சின்னராசா ஆகியோரின் சித்தியும்,
காலஞ்சென்ற விவேகானந்தன், சதானந்தன், விபூலானந்தன் ஆகியோரின் ஆசை அத்தையும்,
அனோஜன், ஹிந்துஜா, றொசான், ருக்ஷன், அபிஷேன், கஜாங்கி, சாய்மீரன், சௌமியா, தேவஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அப்துல் ரகுமான், துளசி, மதூஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யஹயா பனீன், தியானா சஜா, தபின் தாரிஸ், மஹ்தூம் அர்ஹப், டேவாத்மிகா ஆகியோரின் செல்லப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.