

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், மாலைதீவு, சாம்பியா, தென் ஆப்ரிக்கா Transkei, பிரித்தானியா Windsor Slough, Preston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மங்கையர்க்கரசி ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-05-2023
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள் நெஞ்சமதை
நெகிழ வைத்தாய்!
உங்களை உருக்கி
எங்களை உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை
எமக்கு உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும்
காலம் இனி என நாம்
மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் முதலாம் ஆண்டு திதி 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Shree Ghanapathy Temple, Wimbledon, 125-133 Effra Rd, London SW19 8PU, United Kingdom எனும் முகவரியில் நடைபெற்று இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences of your Loss.