யாழ். வல்வெட்டித்துறை தெளியம்பை தேக்குமாவடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை வல்லிபுரப்பரியாரியர் வீதியை வதிவிடமாகவும், கொழும்பு கிராண்ட் பாஸ், இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மங்களநாதன் இலட்சுமிஅம்மாள் அவர்களின் நன்றி நவிலல்.
31ம் நாள் நினைவஞ்சலி நவில்கின்றோம் நெஞ்சம் நிறை நன்றிகள் பல.
எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட எமது அன்னை அவர்களின் மரணச்செய்திகேட்டு ஆறாத்துயரில் நாமெல்லாம் மூழ்கியவேளையில் உடன் ஓடோடி வந்து பல்வேறு வழிகளிலும் உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அயலவர்கள் மற்றும் நேரிலும் தொலைபேசியூடாகவும் இணையங்கள் மூலமாகவும் எமக்கெல்லாம் ஆறுதல் வார்த்தைகளை கூறி தேறுதல் வழங்கிய அனைவருக்கும் அன்னையின் ஈமைக்கிரியைகளை சிறப்பாக நடத்தியவர்கள், இறுதியாத்திரையின் போது கலந்துகொண்டவர்கள்,மற்றும் இறுதி கிரியையின்போது தேவாரம்,திருவாசகம் பாடியவர்கள் மற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்
எம் தாயாரின் இரங்கல் செய்தியை கண்ணீர் காணிக்கைகளாக்கிய
"மதிப்பிற்குரிய தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை(பிரான்ஸ்)”,
"மதிப்பிற்குரிய தமிழ்சோலை தலைமை பணியகம்(பிரான்ஸ்)”,
"மதிப்பிற்குரிய தமிழ் ஒருங்கிணைப்பு குழு(பிரான்ஸ்)”,
"மதிப்பிற்குரிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு(பிரான்ஸ்)” மற்றும்
”பிராங்கோ தமிழ்தேசிய நடுத்தர வர்த்தகர்கள் சங்கம் பிரான்ஸ் வர்த்தக சங்கத்திற்கும் மற்றும்
சேர்ஜி தமிழ் சோலைகள், சேர்ஜி தமிழ்சோலை நிர்வாகிகள்,
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சேர்ஜி தமிழ் சங்க உறுப்பினர்களுக்கும் மற்றும் ஈமைக்கிரியையின் போது பூக்கள், மதிய போசன உணவு, தேநீர், குளிர்பானங்கள் வழங்கிய உடன் பிறவா சகோதர குடும்பம்(திருமதி இரவீந்திரன் மதிவதனி) மற்றும்
SNCF தொழிலாளருக்கும் மற்றும் Lankasri சேவைகளுக்கும் அன்னையின் இறுதி நிகழ்வை அழகாக வடிவமைத்து நேரலை வலைஒளி ஊடாக உலக உறவுகள் அனைவருக்கும் பார்வையிட வழி செய்து தந்த ”L CAST TV" நிறுவன உரிமையாளர்(விஜிதரன்) அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளையும் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மேலே குறிப்பிட்டவர்கள் தவிர்ந்து வேறு யாருக்கேனும் நன்றிகள் கூற தவறியிருப்பின் மீண்டும் அனைவருக்கும் நன்றிகளை குடும்பம் சார்பில் தெரிவித்துகொள்கின்றோம்.