Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 MAR 1944
இறப்பு 10 MAY 2023
அமரர் மங்களநாதன் இலட்சுமிஅம்மாள் 1944 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறை தெளியம்பை தேக்குமாவடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை வல்லிபுரப்பரியாரியர் வீதியை வதிவிடமாகவும், கொழும்பு கிராண்ட் பாஸ், இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மங்களநாதன் இலட்சுமிஅம்மாள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் வழியே உன்னதமான வழியென
சொல்லித் தந்த எங்கள் அன்புத் தாயே....
 தான வழியே தர்ம வழி என்று சொல்லித்
தந்த எங்கள் அன்பு தாயே....
 இன்னா செய்தார்க்கும் அவர் நாண
 நன்மையை செய்திட சொல்லித் தந்த அன்பு அம்மாவே..........!
 பிச்சை புகினும் கற்கை நன்கே என்ற கற்கையின்
 சிறப்பை சொல்லி பட்டயம் பெறவைத்த அன்னையே!..
 விட்டுக்கொடுத்தார் கெட்டுப் போனதில்லை என்னும்
பொறுத்தாளும் பண்பைஎம்முள் விதைத்த பொன்னான அன்னையே
வலிகள் பல வந்தாலும் வாழ்வின் நேர்மையை கற்று
 தந்த எங்கள் வலிமையான அம்மாவே..........!
 கருணையில் கர்ணனாய் இருக்கச் சொல்லித் தந்த எங்கள்
 கண்ணியமான அம்மாவே...........!
 உங்கள் உயிருக்குள் எம்மையெல்லாம் அடைகாத்து
 உம் உதிரத்தை உமக்கு பாலாக்கி
பாசத்தால் எம்மையெல்லாம் கட்டிப்போட்டு
 பல இரவுகள் உங்கள் தூக்கத்தை தொலைத்து
ஊர் போற்றும் உன்னத வடிவம் எமக்களித்து
 பசித்தோர்க்கு அள்ளிக் கொடுக்கும் பண்புதனை
 நம் சிரமதில் விதைத்து விட்டு
 எண்ணற்ற நற்பண்புகளை நமக்கு அழகாய்
 சொல்லி வளர்த்த அழகிய அன்னையே........!
 80வது அகவையை தொடும் சொற்ப தருணமதில்
சொல்லாமல் வேகமாய் வீறுநடை போட்டுக்கொண்டு
விண்ணுலகம் சென்றதன் காரணம்தான் என்னவோ.........?
நீங்கள் இன்றி இவ்வுலகில் நாமெல்லாம் எவ்வாறு
நம் வாழ்வின் நாட்களை கடக்க வேண்டும் என்பதனை
 எமக்குரைக்க மறந்து விட்டீரே.........!
 உம்மை நினைக்கும் நொடிதனில் விழியருகே வழிகின்ற
கண்ணீர் துளிகள் ஆண்டு ஒன்று கடந்துவிட்டது...!
 உங்கள் வரவுக்காய் நிறைவேறாத ஆசை என்று
தெரிந்தே காத்திருக்கும்....!!
 பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகள்..
மீண்டும் வர மாட்டீரோ..!!!

தகவல்: மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 12 May, 2023
நன்றி நவிலல் Thu, 08 Jun, 2023