யாழ். சாவகச்சேரி தேவி அகம், டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரிதேவி சுந்தரலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னவளே!
என்னையும் பிள்ளைகளையும் தவிக்கவிட்டு
ஆண்டு ஒன்று ஆனதம்மா!
காதல் என்றால் சேய் ஆவேன்
கருணை என்றால் தாய் ஆவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன் என வாழ்ந்தவளே!
ஆண்டு ஒன்று ஆனாலும்
உள்ள உணச்சியை
வார்த்தையில் வடித்துச் சொல்ல!
நின்றால் நடந்தால் உன் நினைவு
உன் நினைவே அகன்றால் உன்கனவு
நீயர்ற நானாக ஆண்டு ஒன்று ஆனதம்மா!
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டொன்று ஆனதம்மா! பொன்னும்
பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின்
தாய்மடியயைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…
நீ இல்லாமல் அரண்மனையாய்
இருந்தாலும் அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும்
தாயே உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!