யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே மகேஸ்வரி !
உன்னை இழந்து ஆண்டு
ஒன்பது ஆனாலும்- உந்தன்
ஆசை முகமும் நேசப் புன்னகையும்
மறையவில்லை மகேஸ்வரி !
பாரினிலே ஒன்றாய் கூடி மகிழ்ந்த
காலமெல்லாம் மாறிடுமோ? மகேஸ்வரி
உன்னைக் காப்பாற்றப் பாடுபட்டோம் அன்று
விதிதான் வேரூன்றி நின்றதுவோ? மகேஸ்வரி
நிலையில்லா வாழ்வுதனில் பிறப்பு, இறப்பு
இவ்விரண்டும் வாழ்வில் நியதி என்று தெரிந்தும்
நாம் அறியாது தவிக்கின்றோம் இங்கு
நம் பாசமும் பந்தமும் பிரிவினில்
முடிவில்லா தொடரலையே மகேஸ்வரி !
வருடங்கள் நீண்டாலும் ஆறாது எம் துயரம்
நாம் கூடும் இடமெல்லாம் உன் இழப்பும்
உன் நினைப்பும் பெரும்
வேதனையைத் தருகின்றதே மகேஸ்வரி !
என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் எம் மனதில்!
ஒவ்வொரு கணமும் நினைத்து நினைத்து அழுகின்றோம்
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..