யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வேலும்மயிலும் அவர்களின் நன்றி நவிலல்.
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்
எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய் திகழ்ந்து
எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி
மீளாத் துயில் கொண்ட எங்கள் குடும்பத்தின்
குலவிளக்கு மகேஸ்வரி வேலும்மயிலும் அவர்கள்
அவரின் மறைவு செய்தி கேட்டவுடன், எமது இல்லம் தேடி வந்து, துயர் பகிர்ந்து, உள்நாட்டு, வெளிநாட்டு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்க்கும், அவ்வப்போது உணவு வழங்கி எமக்கு உதவியோர்க்கும், தொலைபேசி மூலம் துயர் பகிர்ந்தவருக்கும், மலர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அவருக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்த Toronto East Sai Centre க்கும், அம்மாவின் அந்தியேட்டி நிகழ்வை நடாத்த உதவிய Scarborough Sai Centre க்கும், மின் அஞ்சலிகள் மூலம் துயரச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், இறுதிக்கிரியைகள் ஆற்றிய குருமார்களுக்கும், ஊர்வலத்தில் கலந்து கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அம்மாவின் பெயரால், இலங்கையில் வாழும் வறிய குடும்பப் பிள்ளைகளுக்கும் அமுது வழங்கிய நண்பர்களுக்கும், அத்துடன் Chapel Ridge Funeral Home அமைப்பினர்க்கும், இந்த மடலை அச்சிட்டு பிரசுரித்த Quality Printing அமைப்பினர்க்கும், அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எம் இதயம் கனிந்த நன்றிகளை கரங்கூப்பி சிரந் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறோம்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
மீண்டும் நன்றியுடன் கணவன், மக்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்