Clicky

தோற்றம் 25 MAY 1933
மறைவு 08 JUN 2021
அமரர் மகேஸ்வரி சுப்பிரமணியம்
வயது 88
அமரர் மகேஸ்வரி சுப்பிரமணியம் 1933 - 2021 கோப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மு.பரமேஸ்வரன் 26 JUN 2021 Netherlands

அமைதியும் அடக்கமும் நிறைந்த கனிவான முகம் கண்டவுடன் வணங்கத் தோன்றும் அன்பு நிறைந்த பார்வை ஒரே மாதிரியான இதயம் நிறைந்த அன்பு வாழ்க்கையில் பிள்ளைகள் மீது அளவில்லா நம்பிக்கை தனது பெண்பிள்ளைகளுடனான எமது நட்பை ஏற்றுக்கொள்ளும் நயந்த பண்பு விளையாட்டில் நான் காயப் பட்டுக் கிடந்த ஒரு நாளில் விபூதி பிரசாதம் கொடுத்து அனுப்பிய தாய் எப்பொழுது சென்றாலும் அன்பான வரவேற்பு சாப்பிடுங்கோ பரமேஸ்வரன் என அழைத்து தவறாத உணவளிப்பு இத்தனையும் நிறைந்த பேரன்பு நிறைந்த அன்னை எனது இன்னொரு தாயாக நான் உணர்ந்த உன்னதப் பெண்மணி எந்த நாடு சென்ற போதும் என்னால் மறக்க முடியாதவரம்மா நீங்கள் …!! இந்த மண்ணை விட்டு நீங்கள் இன்று சென்றிருக்கலாம்… எனது இதயத்தை விட்டு நீங்கள் என்றுமே அகலவில்லை…!! சொர்க்கத்திலிருக்கும் உங்களுக்கு… உங்கள் நினைவுகள் நிறைந்த கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்…!! உங்கள் பிரிவில் துயரடைத்தவர்களில் ஒருவனாக… முத்துக்குமாரு பரமேஸ்வரன் நெதர்லாந்து

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Jun, 2021
நன்றி நவிலல் Thu, 08 Jul, 2021