1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகேஸ்வரி இராஜரட்ணம்
வயது 94
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:02/12/2025
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி இராஜரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இமை மூடித் திறப்பதற்குள்
ஆண்டொன்று முடிந்ததம்மா
ஆனால் மீண்டும் உமை
நாம் காணும் வரை ஆறாது
எம் மனம் அம்மா
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது
சொல்ல வார்த்தைகளே இல்லை
அம்மா தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மம்மா!
நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலை தடுமாற வைத்தீர்கள் அம்மா!
ஆசைகள் காட்டியா எங்களை வளர்த்தீர்கள்
இல்லையே பாசத்தையே காட்டியெல்லோ
எங்களை வளர்த்தீர்கள் அம்மம்மா!
இனி ஓர் ஜென்மம் இருப்பினும்
நீங்களே எமக்கு தாயாக வேண்டும் அம்மம்மா!
தகவல்:
குடும்பத்தினர்