1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகேஸ்வரி மாணிக்கவாசகர்
(கிளி அக்கா)
உரிமையாளர்- SMK ரேடர்ஸ் பிரம்படி, கொக்குவில்
வயது 73
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா... எங்கள் மகேஸ் அம்மா...
குடும்பத்தை கோயிலாக்கி...
மானிடப் பிறப்பின் மகத்துவத்தை உணரவைத்து...
நானிலத்தோர் தேடுகின்ற அறவழியில் வாழ்வமைத்து
கிளியினை ஒத்த பேச்சாலே
அனைவரையும் அரவணைத்து
வறியோர்க்கு கரம் கொடுத்து
கல்விக்குக் கொடைகொடுத்து
பூதலத்தோர் போற்றிடவே வாழ்ந்தீர்... தாயே
உங்கள் ஊனினை உருக்கி எம்மை
மேன்மக்களாக்கி விட்டு
வானுலகு சென்றின்று ஓராண்டு ஆனதம்மா- தாயே
இந்நாளில் உங்களை நினைவு கூறுகின்றோம்.
என்றும் உங்கள் நினைவுகளுடன் அன்புக் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்