யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும்.
அன்பின் திருவுருவாய்
எங்களை ஆதரித்த தாயே!
இன்முகம் காட்டி இன் சொல் பேசி
எங்களை உருவாக்கிய தெய்வமே!
எம்மை விட்டுச் சென்றாலும் என்றும்
எங்கள் வாழ்வோடு இருப்பீர்கள் அம்மா!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 07-06-2019 வெள்ளிக்கிழமை மு.ப 07:00 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நாச்சியார் கோவிலடியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில்(ராஜா கிறீம் கவுஸ் மண்டபம்) நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.