
அன்பும் பண்பும் நிறைந்த அம்மா அவர்களின் நினைவுகள் மறக்கமுடியாதவை. முன்னர் பாடசாலை ஆசிரியையாகவும் சேவையாற்றியிருந்த அவர்கள், அதற்கே உரிய பாங்கில் எம்முடனான உரையாடல்களின்போதெலாம் அறிவும் அக்கறையும் சேர்ந்த தகவல்களைப் பரிமாறும் அவர்க்கேயுரிய பாங்கு சிறப்பானது. அமைதி, ஆன்மீகம், பண்பு, பணிவு, விருந்தினரை வாஞ்சையுடன் வரவேற்று உபசரித்தல் அனைத்தினாலும் சந்திப்பவர்கள் யாவரினதும் மனங்களில் இலகுவாக இடம்பிடித்து விடுவார். தென் கலிபோர்ணியா தமிழ் நண்பர்கள் வட்டத்தினரின் வருடாந்த பாரம்பரிய ஒன்றுகூடல் நிகழ்விலும் அம்மா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கியிருந்தார். அம்மாவின் மறைவு மிகவும் துயரமேயாயினும், அவரின் சீரிய சிறப்பான வாழ்வு பெருமைக்குரியது. கொண்டாடப்படவேண்டியது. அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அம்மாவின் நல்லாத்மா ஈசனாம் சிவனடியில் பேரானந்த நிலைபெற இறைவனை வேண்டுகிறோம். பிரார்த்தனைகளுடன், பாலா, கவிதா, பிள்ளைகள் Chino Hills, California 91709.

We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.