கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் குகனேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாடாத மலராய் வாசம் தந்தீர்!
வஞ்சகம் ஏதுமின்றி பாசம் தந்தீர்!
வசதியாய் நாம் வாழவாழ்வு தந்தீர்!
பாதி வழிவிட்டுசென்று வலியும் தந்தீர்!
அன்பின் உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா!
இறைவன் உங்களை ஏன் அழைத்தார் அப்பா!
இவ்வுலகில் எம்துயர் போக்க
யார் வருவார் அண்ணா!
கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களை
தவிக்க விட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே!
உங்களுக்கு நிகர் யார் ?
உங்கள் சிரித்த முகத்தையும், வேடிக்கையான
பேச்சையும் எங்கே காண்போம்!
மீண்டும் ஒருமுறை உங்கள் திருமுகம்
காண உள்ளம் பரிதவிக்கின்றது !
என் செய்வோம் யாரை நோவோம் விதியா !
ஆண்டு ஒன்று ஆனாலும்
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...
என்றென்றும் உங்கள் நினைவுகள்
அழியாது எம்முடன் வாழும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்