தொல்புரத்தை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணம், கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-03-2024
"புகழ் பூத்த யாழ்ப்பாணப் பெருநகரின்,
கொட்டடிப் பகுதிதனில்
கோலோச்சிய சீரிய சீனிவாசகம் பரம்பரையின்
அதிமூத்த தீபம் அணைந்ததுவோ!
வந்தாரை வரவேற்று,
வயிறார அமுது படைத்த
வளைக்கரம் ஓய்ந்ததுவோ
என்றென்றும் அழகொளிரும்
இனிய வதனம்- தன்
புன்னகையை இழந்ததுவோ!
எண்பத்தியொன்பதாவது அகவையில்,
எட்டாத தொலைவு சென்றதுவோ"
பாசத்தின் பிறப்பிடமே!
எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இம் மண்ணில் எம்மை மலர வைத்த தாயே!
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய்- அம்மா
எங்கள் இதயத்தின் துடிப்பாக
எங்கள் சுவாசத்தின் மூச்சாக
எங்கள் உயிரோடு கலந்து
எங்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் அன்புத் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!