1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
23
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-10-2023
ஆண்டு ஒன்று ஓடிவிட்டது
ஆனாலும் உங்கள் அன்புக்கு நாங்கள்
என்றென்றும் அடிமை அப்பா!
ஓராண்டு அல்ல எத்தனை ஆண்டுகள்
ஓடிமறைந்தாலும் எங்கள் மூச்சு இருக்கும்வரை
உங்கள் நினைவிருக்கும்!
காலன் தான் உங்களை எங்கள்
காவல் தெய்வமாக்கிவிட்டானோ
எங்களுக்காக வாழ்ந்து எங்களை நல்வழிபடுத்திய
எங்கள் குடும்ப குலவிளக்கே!
உங்களை நாங்கள் இழந்து விட்டோம் என்று
நினைக்க எங்கள் மனம் ஏற்க மறுக்குதப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய அந்த இறைவனையே
நாங்கள் வேண்டி நிற்கின்றோம்!!!
என்றென்றும் உங்கள் நினைவில்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரர், சகோதரிகள், மைத்துனர்மார்கள், மைத்துனிமார்கள் மற்றும்
உற்றார், உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்