2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகேந்திரன் கனகேந்திரம்
வயது 78
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, ஜேர்மனி Tuttlingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் கனகேந்திரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! அன்புக்கு உருவம்
நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள்
எங்கு தான் சென்றீர்களோ?
ஆண்டு மூன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம்
பாராமல் நாங்கள்
கலங்கித் தவிக்கின்றோம்!
ஆலவிருட்சம் போல் கிளைகளைப்
பரப்பி எங்களை எல்லாம்
தாங்கி நின்றவரே!
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள்
உள்ளத்தில் வற்றாத ஊற்றாகப்
பொங்கிப் பெருகும்!
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய் உளமுருகி
இறைவனிடம் வேண்டுகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்