Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 26 JUL 1956
இறப்பு 10 MAY 2024
திருமதி மகேந்திரன் கமலாவதி 1956 - 2024 கந்தர்மடம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கந்தர்மடம் அன்னசத்திர லேனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் கமலாவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?

காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும் 
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!

ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
நாட்கள் 31 சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
ஆனால் முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதம்மா

துன்பம் துயரம் தெரியாமல்
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
நாட்கள் 31 ஆனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.