
யாழ். கோப்பாய் தெற்கு நீதவான் வளவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heek ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் வாகீசன் அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கமுத்து மயில்வாகனம் முத்துப்பிள்ளை தம்பதிகள்,
மகேஸ்வரன்(ராசா) உதயகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சுகுமார் காலஞ்சென்ற நந்தினி(கொழும்பு), காலஞ்சென்ற ஜெயக்குமார், விஜயகுமார் தேசிங்கராணி(கட்டார்), இந்திரகுமார் யோகேஸ்வரி(கொழும்பு), செல்வச்சந்திரன் ஜெயப்பிரசாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
விதுனன்(Director, KUM Quality Engineering (Pvt) Ltd), சாருஷா(QA, NAVOTAR Soft Ware (Pvt) Ltd) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்துமயில்வாகனம் அம்பிகை(ஜேர்மனி), இரத்தினமுத்து மயில்வாகனம் இந்திராணி(கனடா), Dr. மனோகரன் அகிலினி(நோர்வே), மயூரகுமார் செல்வரூபி(கொழும்பு) ஆகியோரின் பெறாமகனும்,
மகிந்தன், அபிராமி, மதுரா, ஆதித்தன், மகிஷா, மித்திரன், மயூரி, தர்சனாம் ஆதவன், ஆரணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஆஷா, அஜந்தன், விஜிராம், பவித்திரன், துஷியந்தன், றதிகன், யதுஷன், அஸ்வினி, அபிலாஷ், அத்மிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் இராசாம்பிகை தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மகேஸ்வரன் வாகீசன் அண்ணாவின் மரணஅறிவித்தல் பார்த்தேன். நானும் கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான பாசத்திற்குரிய ஒருவரை...