யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் இராசம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உடல்விட்டு உன்னாவி பறிபட்டு ஒருமாதம் முடிஞ்சாச்சு
கடலிட்டு உன் சாம்பல் கரைபட்டும் போயாச்சு
மண்ணோடு நீ வாழ்ந்த காலங்கள் நிறைவாச்சு
விண்ணோடு உன் ஆன்மா இறைபதம் சேர்ந்தாச்சு
ஒருமாசமானாலும் பலவருசம் போனாலும்
அழியுமா உன் ஞாபகம்?
கருவுற்று எமைப் பெற்றாய்
அரும்பாடு பட்டு வளர்த்தாய்
இதற்கேதும் ஈடாகுமா?
பெரும்பேறு பெற்றோமே உனைத் தாயாய் உற்றோமே
இதுவெங்கள் தவப்பேறன்றோ?
தீராது நின் பிரிவு சோகமாய் உன் நினைவு
ஆறாது எம்மனது என்றும்
பாராது உன் உருவம் வாழ்வோமா பாரினிலே
இது வெறும் கனவென்றே தானிருக்கக் கூடாதா?
நீவேறு நாம் வேறா?
எம் மூச்சு, இரத்தம், சதையெல்லாம் நீ
தந்த பெரும்பேறே அம்மா!
பாசத்தின் பொக்கிசமே!
எம் உயிரில் உறைந்திருக்கும் அற்புதத் தாயே!
|நேசத்துடன் எம்மேல் விழிவைத்து
வழிநடத்திச் சென்ற அன்பின் பிறப்பிடமே!
சந்தணமாய் சுகந்தம் பரப்பி
பிறர் எம்மை வந்தனம் பண்ண வைத்தவரே!
காலக் கடலில் நாட்கள் கரைந்து சென்றாலும்
உங்களின் ஞாபக அலைகள் மட்டும் எ
ங்களின் நாடித் துடிப்போடு ஒடியே வருகுதம்மா!
மனசெங்கும் உங்களின் ஈர நினைவுகள்
அடிக்கடி வந்து போக…
இரவிலே உங்கள் உருவம் சுமந்து வரும்
கனவுகள் எம் மனதை வாட்டிப்போக…….
நீங்கள் இல்லாத வீட்டின் வெறுமையோ
எங்களைக் கொன்று போக……..
சோகம் மிதந்து செல்லும் மேகமாய்
இன்றைய எங்களின் நாட்கள் நகர்ந்து செல்லுதம்மா!
உங்களின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்தித்து
நீங்காத்துயரில் நீந்திக் கொண்டிருக்கும்
அன்புக் குடும்பத்தார்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rest in peace amma