யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் கந்தையா அவர்களின் நன்றி நவிலல்.
எம் இதயத்துள் இருந்து எப்படி நீங்கள்
வெளியிற் சென்றீர்கள் எம் தெய்வமே
புரியாத புதிராக இருக்கின்றது எங்களுக்கு
வேறுலகம் சென்றிருந்தால் எங்கள் “வேந்தனே”
“வெகுமதியே” விரைந்தெட்டிப் பார்த்துவிட்டு செல்லுங்களேன்
ஒரு நாள் போவதே ஓராயிரம் ஆண்டாக இருக்கின்றது
எங்கள் குலதெய்வமே என்னவென்று நாம் சொல்ல
எங்கட்டு கருவறையாய் இருந்து காப்பாற்றிய குலவிளக்கே
கண்ணீர்கொட்டி கடவுளை பிரார்த்திக்கின்றோம்
எம் குலசாமியை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி
உண்ண முடியல உறங்க முடியல
உண்ண முடியல உறங்க முடியல
எம் இதயம் கனமாக இருக்கின்றது
எங்கள் லிங்கக்கட்டியே
வந்து பார்க்க ஆசைப்பட்டால்
ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்திடுங்கள்
ஊபர்(Uper) அனுப்புகின்றோம்
உடன் வந்துவிடுங்கள் எம்குலசாமியே
அமரத்துவம் அடைந்த எங்கள் தெய்வத்தின் செய்திகேட்டு எல்லா வழிகளிலும் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் உதவியளித்தவர்களுக்கும், மலர் வளையம் இன்னும் பல முறைகளிலும் உதவியளித்த அனைருக்கும் எம்சிரம் தாழ்த்தி எமது உளமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றோம். அத்துடன் தொடர்பு கொண்டவர்களோடு தொடர்பு கொள்ளாமற்போயிருந்தாலும் அனைவரிடத்திலும் மன்னிப்பையும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்ளுகின்றோம்.