Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 FEB 1941
இறப்பு 30 NOV 2019
அமரர் மகாலட்சுமி ஹரிதாஸ் 1941 - 2019 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலட்சுமி ஹரிதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தீபமே
நீங்கள் எம்மைவிட்டுப் பிரிந்து
ஆண்டுகள் ஐந்து ஆனதே
அன்பின் சோதியே, எம் இல்லத்து ராணியே
கள்ளமில்லா பிள்ளையுள்ளம்,
கருணை நெஞ்சம் கொண்ட
எம்மில்லத்து ஜோதியே
என்றும் எம் உள்ளத்தைவிட்டு அகலாது
எம்மோடு இருப்பீர்கள்

இருப்பினும் இன்றுவரை கணங்கள் தோறும்
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
இதயங்களில் வலியையும்
ஞாபகங்கள் கண்ணீரையும்
தந்துகொண்டேயிருக்கின்றன

ஆண்டுகள் ஐந்து போனாலும்
அலைகடல் ஓய்ந்து போனாலும்
உங்கள் நினைவு எம்மைவிட்டு நீங்காது
மண்ணுலகில் நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எங்களோடு இருக்கும்
என்றென்றும் உங்கள் ஆசிகள்
எங்களுடன் நிறைவாக நிறைந்திருக்கும்

உங்கள் ஆத்மா சாந்திபெற
        இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்