யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சம்பியா, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவி ஜெயமணி முருகையா அவர்களின் நன்றி நவிலல்.
அன்பின் பிறப்பிடமாய் அறிவின் இருப்பிடமாய்
பண்பின் உருவமாய் பண்பாட்டில் சிறப்பாய்
வாழ்ந்து காட்டி எமை வாழவைத்த தெய்வம்
கண்ணியம், கட்டுப்பாட்டுடன்
எமை வளர்த்து- பாரினிலே
சிறப்புடன் வாழவைத்த எம் தாயே!
இன்று பக்கத்தில் நீங்கள் இல்லாமல் வாடுகின்றோம்
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அன்புத் தாயே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rest In Peace aunty