Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 JUL 1949
இறப்பு 01 NOV 2023
அமரர் மகாதேவன் கிருஷ்ணபிள்ளை 1949 - 2023 கரம்பன் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பன் மேற்கு அயித்தாம்புலம் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்பு, சுவிஸ், சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாதேவன் கிருஷ்ணபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?
எங்கே? பிரிந்து போனீர்கள்!

உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா

நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உங்கள் நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!     

தகவல்: குடும்பத்தினர்

Photos