4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகாதேவ ஷர்மா பாலகங்காதர ஷர்மா
(வரதன்)
வயது 56
அமரர் மகாதேவ ஷர்மா பாலகங்காதர ஷர்மா
1966 -
2022
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பருத்தித்துறை துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாதேவ ஷர்மா பாலகங்காதரஷர்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி தேதி: 12-06-2026
ஆண்டு நான்கு ஆண்டுகள் சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம் உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிரஷாந் - மகன்.