யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி கந்தசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே அம்மா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டு ஆன போதும்
உங்கள் நினைவுகள் அன்றாடம்
எங்களோடு இருக்கின்றது அம்மா
கண்முன்னே நீங்கள்
வாழ்ந்த
காலம் கனவாகிப் போனதுவோ!
அம்மா எமை ஒரு நிமிடம்
காணாவிட்டால்
துடி துடித்து
பதை பதைத்த
நினைவுகளை
இன்னும் கண்ணீர்
விழி
நனைக்குதம்மா!
எமை எல்லாம்
அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய
அந்த நாட்கள்
எமை விட்டு
நீண்டதூரம் சென்றாலும்-
அம்மா மாறாது ஒருபோதும்
உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும்
மறையாது
உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அம்மா!!!
என்றென்றும் எழிலோடு எம்
நெஞ்சிலே நீங்கள் வாழ்வீர்கள்!
என்றும் உங்கள் நினைவில் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.......