2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி கந்தசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்து சென்றதம்மா- நீங்கள்
வாழ்ந்த நினைவுகளும் சுவடுகளும்- எம்
நெஞ்சில் நிறைந்து நிற்குதம்மா!
நிகரில்லாத எம் சுவாசமே தாயே- எங்கள்
மனம் தினம் தினம் ஏங்கும் உறவும் “அம்மா”
ஆறுதல் கூறவோ அணைத்துக் கொள்ளவோ
உம்மைப் போல் யாருமில்லையம்மா- உங்கள்
வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஏதுமில்லை இவ்வுலகில்!
பேரன்பிற்கு இலக்கணமானவளே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீ!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர
என்றென்றும் எழிலோடு எம் நெஞ்சிலே நீங்கள் வாழ்வீர்கள்!
என்றும் உங்கள் நினைவில் மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்....
தகவல்:
பிள்ளைகள்