1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகேஸ்வரி சபாபதி
வயது 78
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, நுணாவில், வவுனியா கரப்பன்காடு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி சபாபதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
தகவல்:
மகன்& மருமகள்( பரன்& சஞ்சிதா)
Our deep heartfelt condolences to the bereaved family. May her Saul Rest In Peace.?