
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, நுணாவில், வவுனியா கரப்பன்காடு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி சபாபதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
ஆறாத துயரை நாங்கள் அனுபவிக்க
நீங்கள் மீளாத் துயர் கொண்டீர்கள்
இல் வாழ்க்கை இவ் உலகில் போதும் என
விண்ணுலகில் வாழ்ந்திட நீங்கள்
விரைந்து தான் சென்றீர்கள்
விடியும் பொழுதெல்லாம் உங்கள்
நினைவே- எங்கள் மனதெல்லாம்
தங்களின் ஆத்மா சாந்தி பெற்று
சிவனடி சேர சிந்தை நிறைய
வேண்டி வணங்குகின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு சகல வழிகளிலும் உதவியோருக்கும், இன்னும் பல வழிகளில் உதவியும் ஒத்தாசையும் புரிந்த அணைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவுதினம் 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நாரந்தனை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our deep heartfelt condolences to the bereaved family. May her Saul Rest In Peace.?