யாழ். அல்வாய் வடமேற்கு மாறாம்புலத்தைப் (நிலாவில்) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் வின்சன் கோமகன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மகாலிங்கம் தந்த மகான்
புண்ணியவதி பெற்ற புனிதன்
தந்தை வழி வந்த தனயன்
தனித்துவமான எம் கோமகன்
பதின்ம வயதில் பெற்றவரின்
பழு பகிர பணிக்கு போனாய்
பெற்றவரின் வழியே ஆசிரியப்
பணியில் பேருவகை கொண்டாய்
கடமையில் கண்ணியமானதால் உயர்ந்தாய்
கணித ஆசிரிய ஆலோசகராக
நாற்பதுஆண்டுகள் கல்விச் சேவையில்
நெகிழ்ந்தாய் நீ வடமராட்சியில்
சமூகமும் குடும்பமும் உன் எடையில்
சரி நிகர் சமானமானவையாம்.
இணைத்தாய் உன்னை சிறிய
அறப்பணிகளுடன் அர்ப்பணீப்பாய்
அல்வாய் மெதடிஸ்த திருச்சபையின்
அச்சாணியாக சுழன்றாய், உன்னை
அழைத்த கிறிஸ்துவுக்காக அல்பகல்
அயராது காட்டினாய் சாட்சிய வாழ்வை
ஹாட்லியின் மைந்தன் நீ என்பதால்
ஏற்றாய் விடுதியின் காப்பாளர் பொறுப்பினை
இளைப்பாறிய பின்னும் புன்முறுவலுடன்
இளைஞனாகவே தோன்றினீயே உன் நெறியால்
எப்படி என்பதை யாரிடம் கேட்பது
எம்மை பதறவிட்டு போய் விட்டாயே
எப்படி ஆறுவது, யார் யாரை
எப்படி தேற்றுவது ஏங்குகின்றோம்
எமது குடும்பத் தலைவரின் திடீர் மரணத்தினால் திகைத்து நின்ற எமக்கு கடந்த ஆறு வாரமாக உறுதுணையாக நின்ற அனைத்து உறவுகளுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.
செய்தியைக் கேள்விப்பட்டவுடன் பதைபதைத்து வைத்தியசாலைக்கு ஓடி வந்து எமக்கு பக்க பலமாக நின்ற உறவினர் நண்பர்களுக்கு முதல் நன்றி. அவரது உடலை சீக்கிரமாக எம்மிடம் ஒப்படைக்க உதவிய வைத்திய அதிகாரிகள், மற்றும் நிர்வாகிகளுக்கு எம் விசேட நன்றிகள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அணிதிரண்டு வந்த ஆயிரக்கணக்கான அன்புள்ளங்களுக்கு எம் அன்பு கலந்த நன்றிகள்.
பதாகைகள் மூலம் தமது அன்பையும் அனுதாபத்தையும் தெரிவித்த சமூகஅமைப்புகள், பாடசாலைகளுக்கு எமது நன்றிகள். இறுதி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றியும், அஞ்சலி பிரசுரங்ககளை வெளியிட்ட அமைப்புகளுக்கும், மலர் வளையங்களால் மரியாதை செய்தவர்களுக்கும் எம் நன்றிகள்.
அவரது நல்லடக்க ஆராதனையை சிறப்பாக நடத்திய மெதடிஸ்த திருச்சபை குருமார், ஊழியக்காரர்கள், மெதடிஸ்த சமூகம், மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் எமதுகோடான கோடி நன்றிகள்.
குறிப்பாக அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழகம், மாறாம்புல இந்து இளைஞர் மன்றம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களின் அளப்பரிய உதவிகளுக்கு எம் இதய பூர்வமான நன்றிகள்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய, இன்னமும் கூறிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எம் நன்றிகள்.
இவருக்காகவும் இவரது குடும்பத்துக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எம் நன்றிகள்.