11ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பவனரூபி மகாலிங்கம்
இறப்பு
- 23 MAR 2014
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வண்ணார்பண்ணை கே.கே.ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich Wetswil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பவனரூபி மகாலிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக கலந்த எம் அம்மாவே!
பாசத்தின் சுமையோடு எம்மை
இங்கே பரிதவிக்கவிட்டு நீங்கள் மட்டும்
நெடுந்தூரம் சென்றது ஏன்?
அம்மா நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மை காத்து நின்ற
எங்கள் தெய்வமே விழுதுகள் நாம்
விம்முகின்றோம்
ஆண்டுகள் கடந்தாலும் ஆறவில்லை
எம் மனம் விழிகளில் கண்ணீர்
காயவில்லை காலங்கள் கடந்தாலும்
மாறாது என்றென்றும் உங்கள் நினைவலைகள்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்