யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட லூட்ஸ்மேரி கபிரியேல்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
யாரிடம் செல்வோம் அம்மா நாங்கள் யாரிடம் செல்வோம்
உங்கள் அன்பு தரும் வார்த்தையை கேட்க யாரிடம் செல்வோம் அம்மா
நாங்கள் யாரிடம் செல்வோம்
நீங்கள் எம்மை விட்டு சென்று முப்பத்தொன்று நாட்கள் சென்றுவிட்டதே
உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
நாங்கள் உங்கள் பிரிவால் வாடுகின்றோம்
நீங்கள் எங்களுக்கு தந்து சென்ற நற்குணங்களை
நாங்களும் தொடர்ந்து செய்வோம்
நீங்கள் என்றும் இறைவனுடன் இணைந்து இருக்க
என்றும் உங்களுக்காக வேண்டுகிறோம் இறைவனை
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்
உங்கள் கணவர், மகள், பெற்றார், சகோதரர்களுடன் சந்தோசமாக இருப்பிங்கள்
என்று எண்ணி ஆறுதல் அடைகின்றோம் அம்மா..
உங்கள் சாந்திக்காக என்றும் இறைவனை பிராத்திக்கின்றோம்
உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்...
நீங்கள் எங்களுக்கு வாழ்நாட்களில் செய்த சகலத்துக்கும்
அன்புடன் நன்றியை கூறி நிற்கின்றோம்.
என்றும் நீங்கள் காட்டிய வழியில் நாங்கள் நடக்க
எங்களுக்கு துணையாக இருந்தருள வேண்டி நிற்கின்றோம் அம்மா,
உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நாங்கள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
The greatest loves leave the biggest loss. Our sincere condolences, we are praying for the Lord’s presence to be of comfort to you in this time of grief.