Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 10 JUN 1961
கர்த்தருக்குள் 06 NOV 2017
அமரர் அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம் (யெரோம்)
வயது 56
அமரர் அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம் 1961 - 2017 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்!

ஆண்டு இரண்டு ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
இரண்டு ஆண்டு ஆனாலும் ஐயா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்

எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!

மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்