

யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
எமக்கு பாசத்தைப் பன்மடங்காய்
வாரி வழங்கிய வள்ளல் நீரல்லோ!
இன்று உங்கள் பாசத்திற்காய் ஏங்கவிட்டு
எங்கு சென்று விட்டீர்கள் அப்பா!
ஒரு போதும் நினைக்கவில்லை
எம்மைத் தவிக்கவிட்டுச் செல்வீர் என்று
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
முப்பத்தொரு நாட்கள் போனால் என்ன
முப்பதாண்டுகள் கடந்தாலும்- உங்கள்
வாழ்வும் வாக்கும் பயின்றே வாழ்வோம்!
My sincere condolences to his family . May his soul rest in peace. Om shanthi.